Site icon ITamilTv

Breaking News: ”கடலில் பேனா சின்னம்..” – உச்சநீதிமன்றத்தில் மீனவர்கள் வழக்கு

Spread the love

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும் திமுக தலைவருமான  கருணாநிதிக்கு கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 39 கோடி ரூபாய் செலவில் கருணாநிதியின் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.

அரசு சார்பில் நடந்து கொண்டு இருக்கின்ற நிலையில் நடுக்கடலில் 80 கோடி ரூபாய் செலவில் பேனா ஒன்றை 134 அடி உயரத்தில் நடுக்கடலில் அமைக்க அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த பிரம்மாண்ட கட்டுமானத்துக்கு ‘முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் (penstatue’ )என்று பெயரிடப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துவிட்ட நிலையில் மத்திய அரசின் அனுமதிக்கு இது அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ள இடத்தில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வை மேற்கொண்டு உரிய அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கு, தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம் எழுதி இருந்தது.

இந்த நிலையில், சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடம் (penstatue)அருகே கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு முதல் கட்ட அனுமதி அளித்துள்ளது. இந்த திட்டம் தொடர்பாக திமுக அரசு சார்பில் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது . இதில் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான்,

கருணாநிதி நினைவாக நடுக்கடலில் பேனா அமைக்க நிதி இருக்கும் அரசிடம், மக்கள் நல திட்டங்களுக்கு நிதி இல்லையா..? என்று அவர்கள் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளனர்.

மேலும் நடுக்கடலில் பேனா அமைப்பதால் 13 மாணவர்களை சேர்ந்த மீனர்வர்களின் தொழில் பாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் சென்னையில் கடலில் பேனா சின்னம் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர் மேலும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என மனுவில் குறிப்பிடபட்டுள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது.


Spread the love
Exit mobile version