Site icon ITamilTv

CM In TN தாயகம் திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

CM In TN

CM In TN

Spread the love

8 நாட்கள் ஸ்பெயின் நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் (CM In TN) இன்று தாயகம் திரும்பி உள்ளார்.

தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈட்டுவதற்காக கடந்த மாதம் ஜனவரி 27 ஆம் தேதி மாலை சென்னை விமான நிலையில் இருந்து ஸ்பெயின் நாட்டிற்கு புறப்பட்டார்.

திட்ட தட்ட 8 நாட்கள் ஸ்பெயின் நாட்டில் தங்கி இருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்நாட்டின் தலைநகரான மேட்ரிட்டில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டார்.

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்து அந்நாட்டின் தொழில் அதிபர்கள் மத்தியில் பேருரை ஆற்றினார்.

மிகப் பெரும் தொழில் நிறுவனங்களான, ஹுண்டாய், டாடா நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தங்கள் முதலீடுகளை பன்மடங்கு அதிகரித்துள்ளன

130க்கும் மேற்பட்ட Fortune 500 நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தமது திட்டங்களை நிறுவியுள்ளதே தமிழ்நாட்டில் முதலீட்டுக்கான சிறந்த சூழல் அமைந்துள்ளதற்கு சான்று.

இதன் தொடர்ச்சியாக ஸ்பெயின் நிறுவனங்களும் தமிழ்நாட்டை நோக்கி வர வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக முதல்வர் தெரிவித்தார்.

மின்சார வாகனங்கள், மின்னணுக் கருவிகள், தோல் பொருள்கள், தோல் அல்லாத காலணிகள், ஆடைகள் போன்றவற்றின் உற்பத்தியிலும்

தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உயர் மருத்துவ சேவைகள் போன்ற பல்வேறு துறைகளிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகின்றது

தமிழ்நாட்டில் தொழில்களைத் தொடங்க வரும் முதலீட்டாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தமிழ்நாடு அரசு காத்திருக்கிறது என முதலவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதையடுத்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஸ்பானிஷ் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் தமிழ்நாட்டில் 3000 கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகளை செய்வதாக ஒப்பந்தம் செய்தனர்.

இதையடுத்து நேற்று மாலை ஸ்பெயினில் இருந்து சென்னை புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் இன்று காலை (CM In TN) தாயகம் திரும்பினார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு TR பாலு துரைமுருகன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் கூறியாதவது :

அரசுமுறை பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்று தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்த்துவிட்டு திரும்பியுள்ளேன். ஸ்பெயின் பயணம் சாதனைப் பயணமாக அமைந்துள்ளது.

உங்கள் வாழ்த்துக்களை பெற்று ஸ்பெயின் நாட்டிற்கு சென்ற நான், தமிழ்நாட்டிற்கு பல்வேறு முதலீடுகளை ஈர்த்துவிட்டு திரும்பி இருக்கிறேன். அந்த வகையில் இது மிகப்பெரிய சாதனை பயணமாக அமைந்துள்ளது.

தமிழ்நாடு குறித்தும், கழக அரசு குறித்தும் உலகளாவிய தொழில் நிறுவனங்களுக்கு உள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது.

Also Read : https://itamiltv.com/case-filed-by-abhi-siddar-court-order/

ஸ்பெயின் பயணத்தின்போது ரூ.3440 கோடி முதலீடுட்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கான பயணம் தொடரும்.

பிரதமர் மோடியின் நாடாளுமன்ற பேச்சை பார்த்தேன், ரசித்தேன், சிரித்தேன். காங்கிரஸ்தான் ஆளுங்கட்சி போலவும், பா.ஜ.க எதிர்க்கட்சி போலவும் அவர் பேசியிருக்கிறார், இதுதான் புரியாத புதிராக இருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.


Spread the love
Exit mobile version