அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இரண்டாம் இடம் பிடித்த அபி சித்தர் தனக்கு முதல் பரிசு அறிவிக்க உத்தரவிட கோரி வழக்கு (Court Order) தொடர்ந்த நிலையில்
ஜல்லிக்கட்டு விழா கமிட்டி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த மாதம் ஜனவரி 17 ஆம் தேதி உலக புகழ் பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது .
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடக்கி மாலை 5 மணி வரை சுமார் 10 சுற்றுகளாக நடைபெற்றது .
இப்போட்டியில் 1000காளைகள், 350 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது .
ஒவ்வொரு சுற்றிலும் தலா 25 முதல் 40 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டு 10 சுற்றுகளாக நடைபெற்றது .
போட்டியில் சிறப்பாக விளையாடி முதல் இடத்தை பிடிக்கும் சிறந்த காளைக்கும், மாடுபிடி வீரருக்கும் தலா ஒரு நிசான் கார் பரிசாக வழங்கப்பட்டது .
போட்டியில் கலந்துகொள்ளும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் அனைவருக்கும் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது .
போட்டியின் போது சிறப்பாக விளையாடிய காளைகள் மாடுபிடி வீரர்களுக்கு பைக், ப்ரிட்ஜ், வாஷிங்மெஷின், மிக்சி போன்ற பல்வேறு பரிசுகளும் வழங்கப்பட்டன
இந்த போட்டியில் ஆரம்பம் முதல் இறுதி வரை சிசிடிவி கேமிரா மூலம் கண்காணிக்கப்பட்டது .
ஆன்லைன் மூலமாக பதிவுசெய்யப்பட்ட காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு போட்டியில் கலந்துகொள்வதற்கு முன்பாக வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர்
விருவிருப்புகும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்ற இந்த போட்டிகளை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் திரளாக படையெடுத்து சென்றனர் .
இந்நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 10 சுற்றுகள் முடிவில் இரண்டாம் இடம் பிடித்த அபி சித்தர் தனக்கு முதல் பரிசு அறிவிக்க கோரி விழா கமிட்டியிடம் முறையிட்டார் .
ஆனால் விழா கமிட்டி அவரின் பேச்சை காது கொடுத்து கேட்கவில்லை என்று சொல்லி மதுரை நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் .
இதையடுத்து அபி சித்தரின் மனுவை நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் விசாரித்தனர்.
Also Read : https://itamiltv.com/human-brain-tissue-at-the-scene-of-the-accident/
சிவகங்கை மாவட்டம் பூவந்தியை சேர்ந்த மாடுபிடிவீரர் அபி சித்தர் தாக்கல் செய்த மனுவில், “தன்னைவிட ஒரு காளை குறைவாக அடக்கிய வீரர் கார்த்திக்கை முதல் பரிசு பெற்றதாக அறிவித்தது செல்லாது” என குற்றச்சாட்டியுள்ளார்.
இந்த வழக்கில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டி தரப்பில் (Court Order) பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.