ITamilTv

உச்ச நீதிமன்றத்தில் இந்த ஆண்டு மட்டும் எத்தனை ஆயிரம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது தெரியுமா..?

Spread the love

உச்ச நீதிமன்றத்தில் இந்த ஆண்டு மட்டும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக ஷாக்கிங் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து உச்ச நீதிமன்றம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :

உச்ச நீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் 15ம் தேதி வரை மொத்தம் 52,191 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் வழக்குப்பதிவு, காணொலி காட்சி மூலம் விசாரணை, டிஜிட்டல் ஆவணப்பதிவு உள்ளிட்ட தொழில்நுட்பத்தை திறம்பட உபயோகித்ததன் மூலம் பல ஆயிரம் வழக்குகள் மீது விரைவாக வழக்கு விசாரணைகள் மேற்கொள்ள முடிந்தது.

இதன்காரணமாகவே எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு இத்தனை ஆயிரம் வழக்குகளை விரைவாகவும் நேர்மையாகவும் முடிக்க முடிந்ததாக உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version