Site icon ITamilTv

“உள்ளூர் வேட்பாளருக்கே உங்கள் ஓட்டு’’ – அன்புமணி பிரசாரத்தை சாதகமாக்கிய எடப்பாடி பழனிசாமி

dharmapuri

dharmapuri

Spread the love

உள்ளூர் வேட்பாளருக்கே ஓட்டு போடுங்கள் என்று கடலூரில் அன்புமணி மேற்கொண்ட (dharmapuri) பிரசாரத்தை சுட்டிக்காட்டி தர்மபுரியிலும் உள்ளூர் வேட்பாளருக்கு ஓட்டு போடுங்கள் என்று எடப்பாடி பிரசாரம் செய்தது அதிமுகவினர் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது.

தர்மபுரி நாடாளுமன்ற வேட்பாளர் ஆர்.அசோகனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது.-

தர்மபுரி தொகுதியைப் பொறுத்தவரை அதிமுக, திமுக, பா.ம.க என மும்முனைபோட்டி நிலவுகிறது. இதற்கு முன்பு பாமக நம்மோடு கூட்டணியில் இருந்தபோது 2வது இடத்தில் இருந்தது. பா.ஜ.க மூன்றாவது இடத்தில் இருந்தது. ஆனால், இன்றைக்கு பாரதிய ஜனதாவோடு, பா.ம.க கூட்டணி அமைத்துள்ளது என்றால், அக்கட்சியின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

அதிமுகவுக்கு ஓட்டு போட்டால் வேஸ்ட் என்று அன்புமணி பேசுகிறார். ஆனால் அதிமுகவுக்கு ஓட்டு போட்டு ஜெயித்ததால் தான், அன்புமணி எம்.பியாக இருக்கிறார்.

Also Read : https://itamiltv.com/vengai-vayal-issue-in-serious-form-madras-high-court/

ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாத பா.ம.கவுக்கு, அதிமுக எம்.எல்.ஏக்கள் எல்லாம் ஓட்டு போட்டுத்தான் அன்புமணியை எம்.பியாக தேர்ந்தெடுத்திருக்கிறோம். ஆக, அதிமுகவுக்கு ஓட்டு போட்டால் நன்மைதான் கிடைக்கும்.

அதிமுகவுக்குத்தான் பிரதமர் வேட்பாளர் இல்லையே… அவர்களுக்கு ஏன் ஓட்டுப் போடுகிறீர்கள் என்று அன்புமணி சொல்கிறார். பிரதமர் ஒருவரை முன்னிறுத்தி, மத்திய அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது அன்புமணி இந்த பகுதிக்கு எந்த திட்டமாவது கொண்டு வந்தாரா? ஒன்றும் இல்லை.

பிறகு எதற்கு பிரதமர் குறித்து பேசுகிறீர்கள். நீங்கள் அடிமையாக இருக்கப் பார்க்கிறீர்கள். எங்களுக்கு ஆட்சி, அதிகாரம் மத்தியிலே தேவையில்லை. மக்கள்தான் தேவை. மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் மக்களின் பிரச்சனைகளை அங்கு சுயமாகப் பேசவேண்டும் என்றால் தனித்துதான் போட்டியிட வேண்டும்.

பா.ம.கவுக்கு பதவி வேணும். அதற்காகப் போய் கூட்டணி அமைச்சிருக்கீங்க. மக்களுக்கு நன்மை செய்வதற்காக கூட்டணிக்குப் போகவில்லை… அடிக்கடி கூட்டணி மாறிக் கொண்டே இருக்கும்.

Also Read : https://itamiltv.com/jee-main-result-in-10-days/

எடப்பாடி பழனிசாமி ஒன்றுமே செய்யவில்லை என்றும் அன்புமணி பேசுகிறார். ஆனால் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று டிசம்பர் 2020ல் உத்தரவு போட்டு, நீதிபதி குலசேகரன் தலமையில் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டு விட்டது. ஆனால், ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர் அந்த அரசாணையை நீட்டிக்காமல் திமுக கிடப்பில் போட்டு விட்டது. அதனால் காலாவதி ஆகி விட்டது. 2021ல் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால், இந்த கணக்கெடுப்பு பணி நடந்திருக்கும். எனவே எங்களைப்பற்றி பேச பாம.கவுக்கு எந்த ஆதாரமும் இல்லை. கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய ஒரே கட்சி அதிமுக மட்டும்தான்.

அதிமுக இல்லை என்றால், கிராமத்திலே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் வறுமைக்கு தள்ளப்பட்டிருப்பார்கள். புரட்சித்தலைவர் தொடங்கிய அதிமுக அரசால் மட்டுமே கிராமத்தில் வாழும் மக்களுக்கு குடிநீர் வசதி, சாலை வசதி, கல்வி வசதி, மருத்துவ வசதி உள்பட அடிப்படை வசதிகள் கிடைத்திருக்கிறது.

கடலூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அன்புமணி, கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் வசிக்கின்ற வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று கூறியிருக்கிறார். நாங்களும் அதையேத்தான் கேட்கிறோம்…தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் ( dharmapuri ) வசிக்கின்ற அசோகனுக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.


Spread the love
Exit mobile version