Tamilnadu

தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்.. 5 மாநிலங்களில் ₹1,400 கோடி பறிமுதல்!

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதனுடன் தொடர்பாக முக்கிய தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தேர்தல் காலத்தில் மொத்தமாக ரூ.1,400 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பல்வேறு பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

தற்போது தேர்தல் பணிகள் நிறைவடைந்ததால் அவை வாபஸ் பெறப்பட்டுள்ளன.இதில் அதிகபட்ச பறிமுதல் தமிழ்நாட்டில்தான் நடைபெற்றுள்ளது.

மாநிலம் முழுவதும் ரூ.662 கோடி மதிப்பிலான ரொக்கம், மதுபானங்கள், போதைப்பொருட்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதில் மட்டும் ரூ.105 கோடிக்கும் அதிகமான ரொக்கமும், ரூ.5 கோடி மதிப்பிலான மதுபானங்களும் அடங்கும்.

மேலும், போதைப்பொருட்கள், அரிய உலோகங்கள் மற்றும் வாக்காளர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்ட பரிசுப் பொருட்களும் பெரிய அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2021 தேர்தலுடன் ஒப்பிடும்போது, இந்த முறை பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு 48 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *