தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்ததன் மூலம் மொத்த பலம் உயர்ந்தாலும், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை எட்ட இன்னும் 6 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகியுள்ளது.
இதனால் திமுக கூட்டணி உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கோருவதற்காக தவெக தலைவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் திமுக கூட்டணியில் ஏற்பட்ட மாற்றங்கள், குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் நிலையான அரசியல் சூழல் உருவாக வேண்டும் என்பதே முக்கிய நோக்கம் எனவும், வளர்ச்சி திட்டங்களை தொடர்வது அவசியம் எனவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இந்த கூட்டத்தில், திமுக எதிர்க்கட்சியாக வலுவாக செயல்பட வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.
அதேசமயம், தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சில முக்கிய முடிவுகளை கட்சி தலைமை ஆலோசித்து எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநில அரசியல் அடுத்த கட்டத்தில் புதிய திருப்பத்தை எதிர்நோக்கி இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
