பாஜக பிரமுகர் சுரேஷ் கோபிஒரு பெண் பத்திரிகை நிருபரை அனுமதி இல்லாமல் தொடுவது மிகவும் மோசமான செயல் என்று நடிகை காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் செய்தியாளர்களை சந்தித்த சுரேஷ் கோபி பல கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார். அப்போது அங்கிருந்த பெண் பதில் ஒருவர், சுரேஷ் கோபியிடம் கேள்வி கேட்டிருந்தார்.அதற்கு சுரேஷ் கோபி அந்த பெண் செய்தியாளர் தோளின் மீது கை வைத்து பதிலளித்திருக்கிறார்.
உடனே அவருடைய கையை தள்ளிவிட்டு அந்த பெண் செய்தியாளர் சென்றுவிட்டார். பின் மீண்டும் முன்வந்து அந்த பெண் செய்தியாளர் கேள்வி கேட்டார். மீண்டும் அவர் மீது கை வைத்து சுரேஷ் கோபி பதில் அளித்து இருந்தார்.
இந்த சம்பவம் தான் சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பெண் செய்தியாளரிடம் சுரேஷ் கோபி அத்துமீறி நடந்து கொண்டதாக கூறி கண்டனம் தெரிவித்தனர்.மேலும் இந்த அத்துமீறல் குறித்து, கேரள பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் தனது செயலுக்கு நடிகர் சுரேஷ் கோபி மன்னிப்பு கோரியுள்ளார். பெண் பத்திரிகையாளரிடம் அன்பாக மட்டுமே நடந்து கொண்டதாக கூறியுள்ளார். தனது வாழ்நாளில் யாரையும் அவமதியாதை செய்ததில்லை என்றும், தனது செயல் பெண் பத்திரிகையாளரை மனதளவில் காயப்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து காயத்ரி ரகுராம் பதிவிட்டுள்ளதாவது:
சுரேஷ் கோபி சார் எனக்கு அவரை நடிகராகவும், பாஜக பிரமுகராகவும் தெரியும். அவர் ஒரு ஜென்டில்மேன். சில நேரங்களில் நட்பாக பார்ப்பதில் இருப்பது தவறாகும். ஆனால் ஒரு பெண் பத்திரிகை நிருபரை அனுமதி இல்லாமல் சங்கடமாக இருக்கும்போது தொடுவது மோசமான நேரம், கெட்ட பெயர் வந்துவிட்டது.
சில சமயங்களில் நாம் பொதுமக்கள் மற்றும் நமது பத்திரிகையாளர்களிடம் பேசும்போது கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அனைவரும் நண்பர்கள் அல்ல, அரசியலுக்கு வந்த பிறகு அனைவரும் உங்களை நடிகராக பார்க்க மாட்டார்கள். இங்கே ரசிகர் தருணம் இல்லை. துரதிர்ஷ்டவசமாக அவருக்கு கெட்ட பெயர் வருவதை என்னால் பார்க்க முடியவில்லை.
அவர் தவறான நோக்கத்தில் அவரை தொடவில்லை என்றாலும், பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார். சேவை மனப்பான்மை கொண்ட பா.ஜ.க.வினர் மிகக் குறைவானவர்கள். ஆனால் அவர் உண்மையிலேயே சேவை சார்ந்தவர். அந்த பெண் பத்திரிக்கை நிருபர் திரு சுரேஷ் கோபியை தவறாக கொண்டதற்காக மன்னிக்கவும். ஒரு நடிகராக நான் சுரேஷ் கோபியுடன் நிற்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.