ITamilTv

விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கிடுக – அரசுக்கு பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை..!!

Spread the love

தண்ணீர் இல்லாமல் வாடும் பயிர்கள் இருக்கும் இடங்களுக்கு தண்ணீர் கிடைக்க அரசு உடனடி நடவடிக்கை ( premalatha ) எடுக்க வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

விவசாயிகள் பயிரிடும் அனைத்து வகையான கரும்பு, வாழை, தென்னை, நெற்பயிர்கள் போன்றவை பலத்த காற்றால் சேதம் அடைவது, தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு மிகப்பெரிய கவலையையும், வேதனையையும் கொடுத்துள்ளது. எனவே விவசாயிகளுக்கு அரசு உடனடியாக உதவித் தொகையை வழங்கவேண்டும்.

Also Read : இப்போதான் காமராஜர் ஞாபகம் வந்ததா..? செல்வப்பெருந்தகைக்கு தமிழிசை கடும் கண்டனம்..!!

அதேபோல் தண்ணீர் இல்லாமல் வாடும் பயிர்கள் இருக்கும் இடங்களுக்கு தண்ணீர் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் அவரவர் இழப்புகளுக்கு ஏற்ப அரசு உடனடியாக உதவித் தொகையை வழங்கி, விவசாயிகளை பாதுகாக்க வேண்டியது இந்த அரசின் தலையாய கடமை ஆகும்.

மேலும் மூன்று ஆண்டுகால ஆட்சியிலே மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று சொல்லும் தமிழக முதல்வர் அவர்கள், பாதிக்கப்பட்ட விவசாய மக்களுக்கு உடனடியாக உதவியை செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

ஏழையின் சிரிப்பில் தான் இறைவனை காண முடியும்” என்ற பழமொழிக்கேற்ப ஏழை விவசாய மக்களின் ( Premalatha ) முகத்தில் உண்மையான மகிழ்ச்சியை கொண்டு வர வேண்டியது தமிழக அரசின் கடமையாகும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார் .


Spread the love
Exit mobile version