Site icon ITamilTv

Amit Shah interview-”விஜய் அரசியல் வருகை..” அமித்ஷாவின் சூசக பதில்!

Amit Shah interview

Amit Shah interview

Spread the love

Amit Shah interview-அதிமுகவிற்காக கூட்டணி கதவுகள் திறந்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.

தமிழ்நாட்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுகவில் அதிகார போட்டி காரணமாக உட்கட்சி பூசல் ஏற்பட்டது.

இதனால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் என 4 அணிகளாக பிளவுப்பட்டது.

இந்த நிலையில் தான் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது.

ஆனால் அந்த தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டுமே அதிமுகவால் வெற்றி பெற்றது. மேலும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி அதிகாரத்தை இழந்தது.

மேலும் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான் சட்டமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்தாக அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தது.

எனவே தான் பாஜக கூட்டணியில் அதிமுக இடம்பெற்றால் சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்காது என அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தி இருந்தனர்.

இதையும் படிங்க: Pm Modi Speech-”பிரதமர் உரை புரியாத புதிராக இருக்கிறது..”- முதல்வர் அட்டாக்!

இதனையடுத்து அண்ணாமலை மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே கூட்டணி கருத்து தெரிவிப்பதில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு வந்தது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நீடித்து வந்த நிலையில்,

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது.

இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக மீண்டும் அதிமுகவை தங்கள் அணிக்கு கொண்டு வர பாஜக பல கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் அதிமுக தங்களது முடிவில் உறுதியாக இருந்து வருகிறது.

இந்த சூழலில் தான் பாஜக தங்கள் கூட்டணியை வலுப்படுத்த பாமக, தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

மறுபுறம் அதிமுகவிற்காக கூட்டணி கதவுகள் திறந்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா நாளிதல் ஒன்றுக்கு தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக பேட்டி அளித்துள்ளார்.

இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1755117872412782651?s=20

அதில், பாஜகவின் தேர்தல் அறிக்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழ்நாடு நாட்டின் முக்கியமான மாநிலம்,

அதற்கென தேர்தல் அறிக்கையில் நிறைய விஷயங்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அப்போது தமிழ் நாட்டில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பதால் பாஜகவிற்கு பாதிப்பா என்ற கேள்விக்கு,” ஜனநாயக நாட்டில் யாரும் புதிய கட்சியை தொடங்கலாம்.

எந்த கட்சியிலும் சேரலாம். ஆனால் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பதை வாக்காளர்கள் தான் முடிவு செய்வார்கள் என தெரிவித்தார்.

தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி முறிந்து விட்டது, 3வது அணி அமைக்க திட்டமா.? என்ற கேள்விக்கு பதில் அளித்தவர், கூட்டணிக்காக எல்லா கதவுகளும் திறந்துள்ளது.

இது குறித்து ஆலோசித்து வருவதாக அமித்ஷா( Amit Shah interview) நாளிதளில் சூசகமாக தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version