Pm Modi Speech-நாடாளுமன்றத்தில் பிரதமர் உரையைப் பார்த்தேன், படித்தேன், ரசித்தேன், சிரித்தேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 29ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 10 நாட்கள் அரசு முறைப் பயணமாக ஸ்பெயின் நாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார்.
இதனையடுத்து ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த முன்னணி தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் பங்கேற்ற முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்று பேசினார்.
தமிழ் நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கான இந்த பயணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்,
ஹபக் லாய்டு நிறுவனம் ரூ. 2500 கோடிக்கு முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும்,எடிபான் நிறுவனம் ரூ. 540 கோடியும், ரோக்கா நிறுவனமும் ரூ.400 கோடியும் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆக்சியானா, ரோக்கா, ஹபக்-லாய்டு, அபர்ட்டிஸ், கெஸ்டாம்ப், டால்கோ, எடிபான்,
மேப்ட்ரீ உள்ளிட்ட நிறுவனங்கள் தொழில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆர்வம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் ஸ்பெயின் நாட்டில் அரசு முறை பயணங்களை முடித்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார்.
அப்போது அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, நாடாளுமன்றத்தில் பிரதமர் உரை நிகழ்த்தியிருக்கிறார். பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.
அது தொடர்பாக, அந்த நிகழ்வுகளை எல்லாம் நீங்கள் பார்த்தீர்களா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
ஜனாதிபதி திரௌபதி முர்முவின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் மோடி பதிலளித்தார்.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1755106330229248404?s=20
அந்த உரையில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவையும் பிரதமர் தாக்கியும் ,காங்கிரஸ் கட்சி ஒருகுடும்பத்தை தவிர வேறு எவரை பற்றியும் நினைக்காது. இந்தியா கூட்டணியின் ஒரு பக்கம் சிதைந்து விட்டது.
இந்திய கூட்டணி கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லை என்று அந்த உரையில் குறிப்பிட்டு பேசியிருந்தார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பார்த்தேன். படித்தேன். ரசித்தேன். சிரித்தேன்.
ஏனென்றால், பாஜக தான் எதிர்க்கட்சி போலவும், காங்கிரஸ் ஆளுங்கட்சி போலவும்,அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ,ஆட்சிக்கு வந்ததிலிருந்து, எதிர்க்கட்சியாக பிரதமர் செயல்பட்டுக் கொண்டு, ஆளுங்கட்சியாக காங்கிரஸ் இருப்பது போல attack செய்வது போலவும் பிரதமர் மோடி ( Pm Modi Speech) பேசிக் கொண்டிருக்கிறார்.
இதுதான் புரியாத புதிராக இருக்கிறது.” என தெரிவித்துள்ளார்.