Meenakshi Lekhi-கோழிக்கோட்டில் நடந்த பாஜக இளைஞர் மாநாட்டில், ‘பாரத் மாதா கி ஜே‘ சொல்ல மறுத்த பெண் ஒருவரை அரங்கை விட்டு வெளியேறுமாறு மத்திய இணை அமைச்சர் கூறிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் விவேகானந்தர் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் அவேக் – Awake 2024’ என்ற தலைப்பில் நிகழ்ச்சியை பல்வேறு பகுதிகளில் நடத்தி வருகிறது.
அந்த வகையில்,நேற்று கோழிக்கோடு அருகே இந்த இளைஞர் மாநாடு நடைபெற்றது.இதில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில்,சிறப்பு விருந்தினராக, மத்திய கலாசாரம் மற்றும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி,
மற்றும் ஏபிவிபி விளையாட்டுப் பிரிவான கேலோ பாரத் உள்ளிட்ட அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: Chandigarh Mayor Election- ”ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகும் செயல்..”-கடுப்பான நீதிபதி!!
அப்போது நிகழ்ச்சியில் பேசிய இணை அமைச்சர் மீனாட்சி லேகி, ‘‘இந்தியாவின் மக்கள் தொகையில் 65 சதவீதம் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் தான்.
ஊழலற்ற ஆட்சியால் பிரதமர் திட்டங்கள் அனைத்தும் அனைவரையும் சென்றடைகின்றன,’’ என்று கூறி பிரதமரின் சாதனைகளைப் பற்றி எடுத்துரைதார்.
தொடர்ந்த இணை அமைச்சர் மீனாட்சி லேகி, ‘‘கேரள மாநிலத்தின் ஆளுநரான ஆரிப் முகமது கான் என் மனம் கவர்ந்த தலைவர்களுள் ஒருவர்.
ராஜீவ் காந்தி மந்திரி சபையில் இருந்த அவர், ஷாபானு வழக்கில் முத்தலாக்கை தடுத்து நிறுத்த வலியுறுத்தி ராஜினாமா செய்தார்.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1754486202202533992?s=20
ஆனால் தற்போது முத்தலாக் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது,’’ என்று கூறினார்.
பின்னர் நிகழ்ச்சியின் இறுதியில் ‘பாரத் மாதா கி ஜே’ என்று இணை அமைச்சர் மீனாட்சி லேகி சொன்ன போது, அதை இளைஞர்கள் திரும்பச் சொல்லவில்லை.
இதனால் கோபமடைந்த அவர், பெண் ஒருவரை அரங்கை விட்டு வெளியேறச் சொன்னார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த விவகாரம் கேரள அரசியலில் பேசுபொருளாகி உள்ளது. இதற்க்கு கேரள இடதுசாரிகளும், காங்கிரசாரும் விமர்சித்து கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் ‘பாரத் மாதா கி ஜே’ என்று கூறுமாறு இணை அமைச்சர் (Meenakshi Lekhi) மீனாட்சி லேகி நிகழ்ச்சியில் பேசியதற்க்கு சமுகவலைதளத்தில் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.