Site icon ITamilTv

VV PAT விவகாரம்…உச்சநீதிமன்றம் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்!

vvpat issue

vvpat issue

Spread the love

543நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குகான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில், தற்போது முதற்கட்டமாக தமிழகம் , புதுவை உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கு ஏப். 19-ல் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

இத்தேர்தலில் அனைத்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் எனப்படும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவி நாம் யாருக்கு வாக்கு செலுத்தினோம் என்பதை ஒப்புகை சீட்டுடன் உறுதி செய்யும் கருவியாகும்.

இந்நிலையில் ஓட்டு இயந்திரத்துடன் 100 சதவீதம் விவிபேட்டில் பதிவாகும் ஓட்டுகளுடன் ஒப்புகை சீட்டுகளையும் சரிபார்க்க வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கு நீதிபதி சஞ்சீவ்கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது . அப்போது விசாரித்த நீதிபதி சிறிய கட்டுப்பாட்டு கருவி வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டு உள்ளதா அல்லது விவிபேட் இயந்திரத்தில் பொருத்தப்பட்டு உள்ளதா ? வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள சிறிய கட்டுப்பாட்டு கருவியை ஒரே ஒரு முறை மட்டும் தான் பயன்படுத்த முடியுமா? என பல்வேறு கேள்வி எழுப்பினர்.

இதையும் படிங்க: ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் உரிமையும் தகுதியும் … – பிரகாஷ்ராஜ் ‘நச்’ பதில்!

இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், சிப்களை உற்பத்தி செய்த நிறுவனம், அதை மீண்டும் பயன்படுத்த முடியும் என ஆர்டிஐ-க்கு தகவலளித்துள்ளது முரணாக உள்ளது என வாதிட்டார்.

அப்போது ஆணையத்தை கண்மூடித்தனமாக நம்பாமல் இருக்க முடியாது என்றும், அறிவியல் பூர்வமான விமர்சனமே தேவை என்றும் அறிவிறுத்தியுள்ளது. மெழுகி தேர்தல்களில் முறைகேடு நடந்ததாக இதுவரை எந்த ஆதாரமும் கொடுக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் வாதிடப்பட்டது.

அனைத்து வாதங்களையும் கேட்டறிந்த உச்சநீதிமன்றம், தொழில்நுட்பம் சார்ந்த விவகாரங்களில் தேர்தல் ஆணையம் கூறும் தகவல்களை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்றது. தங்களால் தேர்தலை கட்டுப்படுத்த முடியாது என்றும் கூறியது. அனைத்து கேள்விகளுக்குமான பதில்கள் கிடைத்துள்ளதாக கூறிய வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைகளை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.


Spread the love
Exit mobile version