குரோம்பேட்டை பகுதியில் ஓடும் அரசுப் பேருந்தில் ஏற்பட்ட தகராறு கொடூரமாக மாறி, முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே வசித்து வந்த 74 வயதான சந்திரசேகரன், தாம்பரம் MEPZ நிறுத்தத்தில் இருந்து வடபழனி நோக்கி சென்ற பேருந்தில் பயணம் செய்தார்.
அப்போது, பேருந்தில் இருந்த அமர்நாத் என்ற இளைஞர், LED திரையில் காணப்பட்ட வழித்தடம் குறித்து அவரிடம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு சந்திரசேகரன் பதிலளித்த விதம் வாக்குவாதமாக மாறி, இருவருக்கும் கடும் தகராறு ஏற்பட்டது. கோபமடைந்த அமர்நாத்,
முதியவரை தாக்கியதில் அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பிச் செல்ல முயன்ற அமர்நாத்தை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது.
