ITamilTv

Karur MP | ”ரத்தத்தில் கடிதம்..” – ஜோதிமணி போட்டியிட காங்கிரஸ் நிர்வாகிகள் எதிர்ப்பு!

Karur MP

Spread the love

Karur MP | கரூர் தொகுதியில் எம்.பி. ஜோதிமணிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது என அம்மாவட்டத்தில் நடந்த காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது சலசலப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.

கரூர் மாவட்டத்தில் தாந்தோணிமலையில் உள்ள தனியார் மண்டபத்தில் காங்கிரஸ் சார்பில் மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் மாவட்ட செயலாளர் சி.சேகர் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் தற்போதைய, முன்னாள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினர்.

அந்த கூட்டத்தில்,வரும் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் வெற்றி குறித்தும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தமிழகம் வருகை குறித்தும் ஏற்பாடுகள் குறித்தும் விவதிக்கப்பட்டது.

மேலும் ‘கூட்டணியில் கரூர் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு பெற்றுத் தரவேண்டும். தற்போதைய எம்.பி. ஜோதிமணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: Saidai Duraisamy Son | 8 நாட்களுக்குப் பின் வெற்றி துரைசாமி உடல் மீட்பு!

கரூர் தொகுதியில் போட்டியிட முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்பிரமணியனுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்’ என வலியுறுத்தி க.பரமத்தி வட்டார துணை தலைவர் விசுவை ஆர்.செந்தில் குமார் அவரது ரத்தத்தில் எழுதிய கடிதத்தை வழங்கினார்.

அந்த கடிதத்தில்,”‘கரூர் எம்.பி தொகுதியை கூட்டணியில் மீண்டும் காங்கிரஸுக்கு பெற்றுத் தரவேண்டும். எம்.பி ஜோதிமணிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது.

முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்பிரமணியனுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும்’ என மாநில தலைமைக்கு கடிதம் எழுதியிருந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவரும்,ஏஐசிசி உறுப்பினருமான பேங்க் சுப்பிரமணியன்,

இதையும் படிங்க: https://x.com/ITamilTVNews/status/1756994631013744958?s=20

எம்.பி. ஜோதிமணி(Karur MP)சரிவர நடந்து கொள்ளாததாலும், மரியாதை கொடுக்காததாலும் கட்சியில் இருந்து பலர் விலகி விட்டனர்.

தான் என்ற அகம்பாவத்தில் கட்சியை அழித்துக் கொண்டு இருக்கிறார். ராகுல் காந்தியின் பாதயாத்திரையின் போது பலரிடம் பணம் வசூல் செய்துவிட்டு கட்சியினருக்கு தங்குவதற்குக் கூட இடம் ஏற்பாடு செய்யவில்லை.

ராகுல் காந்தி பிரதமராக வரவேண்டும்; அதற்கு அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும். அதற்கு ஒற்றுமையாக இருந்து பாடுபடுவோம்” என்றார்.

வரும் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவது. இம்மாத இறுதியில் தமிழகம் வரும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு,

சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார்.


Spread the love
Exit mobile version