Site icon ITamilTv

கிளாம்பாக்கத்தை transport hub ஆக மாற்ற வேண்டும்

transport hub

transport hub

Spread the love

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் , கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி மண்டல போக்குவரத்து மையமாக மாற்ற வேண்டும் என transport hub பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளுக்கான பேருந்து நிலையத்தை கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு மாற்றியதால், வெளியூர் செல்லும் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தை, அனைத்து பொதுப்போக்குவரத்து வசதிகளையும் ஒன்றிணைக்கும் வகையிலான, நவீனமான Regional Mobility Hub ஆக மாற்ற வேண்டும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட பொதுப்போக்குவரத்து வசதிகளை ஒரே இடத்தில் நவீனமான முறையில் ஒருங்கிணைக்கும் கட்டமைப்பினை Mobility Hub என அழைக்கின்றனர்.

காற்று மாசுபாட்டை தடுக்கவும் :

transport hub பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைப்பதன் மூலம் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தவும் காற்று மாசுபாட்டை தடுக்கவும் இது பயன்படுகிறது.

மாநகரங்களை ஒரு பெருமிதமான பகுதியாக மாற்றவும் மக்களிடையே சமுதாய உணர்வை மேம்படுத்தவும் Mobility Hub வழி செய்கிறது.

மாநிலத்தின் மற்ற பகுதிகளுடன் மாநகரினை இணைக்கும் வகையில் அமைக்கப்படுவது Regional Mobility Hub ஆகும்.

அத்தகையை ஒரு Regional Mobility Hub ஆக கிளம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தை மாற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் :

தமிழ்நாட்டின் சூழலில் பொதுவாக பின்வரும் கட்டமைப்புகளைக் கொண்டு Mobility Hub உருவாக்கப்பட வேண்டும்.

தொடர்வண்டி, மெட்ரோ இணைப்பு எளிதாகவும் உடனுக்குடனும் கிடைக்க வேண்டும்.

ஆட்டோ, வாடகை கார் இணைப்பு எளிதாகவும் நியாயமான கட்டணத்திலும் கிடைக்க வேண்டும்.

மேற்கண்ட அனைத்து போக்குவரத்து வசதிகளுக்கும் பயணிகள் எளிதாக செல்வதற்கு இணைப்பு வசதிகள் இருக்க வேண்டும்.

தடையற்ற வழிகள், நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கி வசதிகள், நடை மேம்பாலம், சுரங்கப்பாதை உள்ளிட்ட வசதிகள் வேண்டும்.

தனியார் வாகனங்கள், ஆட்டோக்கள், வாடகை கார்களில் வருவோர் எளிதாக இறங்கவும் ஏறவும் வசதிகள் வேண்டும்.

இருசக்கர வாகன நிறுத்தம் கட்டுப்படியான கட்டணத்தில் இருக்க வேண்டும். அதே நேரத்தில், தனியார் கார் பயன்பாட்டை ஊக்குவிக்கக் கூடாது.

அனைத்து இடங்களுக்கும், அனைத்து போக்குவரத்து வசதிகளுக்கும் வழிகாட்டும் பலகைகள், இலச்சினைகள் வேண்டும்.

இலவச வைஃபை இணைப்பு, செல்பேசி மின்னூட்ட வசதிகள் இருக்க வேண்டும்.

தூய்மை பணியை கடைபிடிக்க வேண்டும் :

வழிகாட்டும் பணியாளர்கள் இருக்க வேண்டும். இலவச கழிப்பிடங்கள், தூய்மையான காத்திருப்போர் பகுதி தேவை

தூய்மை, வெளிச்சம், பாதுகாப்பு உள்ளிட்டவை பராமரிக்கப்பட வேண்டும். கடைகள், உணவகங்கள் தரமாகவும் கட்டுப்படியாகும் விலையிலும் இருக்க வேண்டும்.

உடனடியாக 300 முதல் 500 புதிய MTC பேருந்துகளை கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை மாநகர் மற்றும் புறநகரப் பகுதிகளுக்கு இயக்க வேண்டும்.

சென்னை விமான நிலையம் – கிளாம்பாக்கம் இடையே உடனடியாக மெட்ரோ இணைப்பை ஏற்படுத்த வேண்டும்.

Also Read :https://itamiltv.com/the-trailer-of-siren-movie-is-viral-on-the-internet/

கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தை Regional Mobility Hub ஆக மாற்றும் திட்டத்தை உடனடியாக வகுத்து செயல்படுத்த தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.


Spread the love
Exit mobile version