ஜெயம் ரவியின் முரட்டு தனமான நடிப்பில் உருவாகி உள்ள (SIREN Trailer ) சைரன் திரை படத்தின் ட்ரைலர் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது .
தமிழ் சினிமாவில் இருக்கும் பல சூப்பர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி.
சினிமா பின்புலம் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தாலும் இவரது நடிப்புக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
அந்த வகையில் உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் கிளாசிக் நயனகன் ஜெயம் ராவின் நடிப்பில் தற்போது வேற லெவலில் உருவாகி உள்ள திரைப்படம் தான் “சைரன்” .
பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தை இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ உள்ளிட்ட படங்களில் எழுத்துப் பணியில் பங்காற்றிய ஆண்டனி பாக்யராஜ், இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் மூலம் ஆண்டனி பாக்யராஜ் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் அறிமுகமாகி உள்ளார்.
டீசெண்டான பொருட்செலவில் தயாராகி உள்ள இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நவரச நாயகி நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இவர்களுடன் பல இளம் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ஜி வி பிரகாஷ் அவர்களின் அழகிய மெட்டுகளுடன் உருவாகி உள்ள இப்படத்தின் பாடல்கள் ஒவ்வென்றாக வெளியாகி வரும் நிலையில்
படத்தின் ட்ரைலர் அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்தனர். இதையடுத்து இப்படத்தின் டெரிபிக்கான ட்ரைலரை படக்குழு நேற்று வெளியிட்டது.
ஆக்சன் காதல் செண்டிமெண்ட் என ஆரம்பம் முதல் இறுதி வரை தரமான காட்சிகளுடன் கோர்க்கபட்ட இப்படத்தின் ட்ரைலர் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Also Read :https://itamiltv.com/annamalai-speaks-without-knowing-the-value-of-aiadmk/
சமீப காலமாக ஜெயம் ரவி கையில் எடுக்கும் படங்கள் சில ஏற்ற இறக்கங்களை கண்டு வரும் நிலையில் ரவிக்கு இந்த படம் அவரது வெற்றி படங்களில் ஒன்றாக அமையுமா இல்லையா என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
இதோ அந்த (SIREN Trailer ) ட்ரைலரை நீங்களும் பார்த்து எப்படி இருக்கிறது என்ற உங்கள் ;கருத்துக்களை கமென்டில் தெளித்து விடுங்கள் நண்பர்களே