ITamilTv

சேவைப் பணிகள் பாதிப்பு ; தேர்தல் ஆணையம் கவனிக்குமா? – கேள்வி எழுப்பும் மா.சுப்பிரமணியம்

MASU 05

Spread the love

நடத்தை நெறிமுறைகளால் மக்களுக்கான சேவைப்பணிகள் பாதிக்கும் நிலையில் தளர்வு அளிக்க அமைச்சர் மா.சுப்பிரமணியம் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் திமுக சார்பில் குடிநீர் பந்தலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர் தேர்தல் ஆணையத்தின் நடத்தை நெறிமுறைகளைச் சுட்டிக்காட்டினார்.
ஒருவரால் 10 பேருக்கு நன்மை கிடைக்கும் என்றால் அதனை தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து, அவர் கூறியதாவது:-
தேர்தல் நடத்தை நெறிமுறைகள் 45 நாட்களுக்கும் மேலாக இருப்பதால் பெரிய அளவிலான சேவைப் பணிகள் பாதிக்கப்படுகிறது.
கழிவுநீர் சாக்கடை சீரமைப்பு, திடீர் என்று ஏற்படும் குடிநீர் குழாய் பழுது, மின் தடை போன்றவற்றை அதிகாரிகளுக்கு தெரிவித்து அவர்களுடன் சென்று அவற்றை சரி செய்ய மக்கள் பிரதிநிதிகள் செல்லமுடியாத சூழல் நிலவிக் கொண்டிருக்கிறது.
மக்கள்பிரதிநிதிகள் சேவைத்துறை அதிகாரிகளுடன் இணைந்து மக்களுக்கு ஏற்படும் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண தேர்தல் ஆணையம் வழிவகை செய்ய வேண்டும்.
நான் சார்ந்திருக்கிற மருத்துவத்துறையில் ஏதேனும் பிரச்சனை என்றாலும் எங்கும் போய் ஆய்வு செய்ய முடியாது.
2நாட்களுக்கு முன்பு ஏற்காட்டில் பேருந்து கவிழ்ந்த விபத்தில்5 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
55 பேர் காயம் அடைந்து சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: லட்சக்கணக்கில் அழியும் அபாயம் – தென்னையை காக்க என்ன செய்யப் போகிறது அரசு?

தேர்தல் நடத்தை நெறிமுறையால் எனக்கு தடை இல்லை என்றால் உடனடியாகச் சென்று, காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுத்திருப்பேன். தற்போதும் கிடைக்கத்தான் செய்கிறது. அமைச்சர் என்னும் முறையில் சென்றிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
அந்தப் பணியை தற்போது செய்ய இயலவில்லை.
எனவே தேர்தல் ஆணையம் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு, உயிர்காக்கும் பிரச்சனைகளுக்கு இந்த கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.


தண்ணீர் பந்தல் அமைப்பதற்கு இருந்த தடையை நீக்கிய அதே சூழலில், மக்களுடன் இணைந்து சேவைப்பணி ஆற்றுவதற்காக நடத்தை நெறிமுறையில் இருந்து சற்று தளர்வளிக்கக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

இதையும் படியுங்க: ”ஆளுநர் மீது பகீர் பாலியல் புகார்..”- அரசியலில் புயலை கிளப்பிய சம்பவம்!


Spread the love
Exit mobile version