ITamilTv

கஞ்சாவுடன் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மனு; பா.ஜ.க நிர்வாகி கைது

stalin 03

Spread the love

தமிழகத்தில் திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டக் கஞ்சாவுடன் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மனு அளித்த பா.ஜ. நிர்வாகியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தேர்தல் முடிவடைந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஓய்வெடுப்பதற்காகத் தனது குடும்பத்தினருடன் 5 நாள் சுற்றுப்பயணமாகக் கொடைக்கானல் சென்றார்.
இன்று காலை 9 மணிக்குச் சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமான மூலம் புறப்பட்டு மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.
முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினரின் தனிப்பட்ட பயணம் என்பதால் கட்சி நிர்வாகிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.

அதே நேரம் முதல்வரின் வருகையை முன்னிட்டு மதுரை விமான நிலையம் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
மதுரையில் இருந்து கார் மூலமாகக் கொடைக்கானலுக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின், அங்கு தனியார் விடுதியில் ஓய்வு எடுக்கிறார். இந்த நிலையில் மதுரை வந்த முதலமைச்சர் ஸ்டாலினை, பா.ஜ.க ஓ.பி.சி அணி மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர் பாண்டியன் நேரில் சந்தித்து மனுஅளிக்க நெருங்கினார்.
அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் சங்கர்பாண்டி வைத்திருந்தமனுவை வாங்கி அதனைச் சோதித்தனர்.
அந்தமனுவில் “கடந்த 2 ஆண்டுகளாகத் தமிழகத்தில் போதை மற்றும் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது.
சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களும் எளிதில் கிடைக்கிறது.
இதனால் மாணவ மாணவிகள் உட்படப் பலரும் போதைக்கு அடிமையாகி வருகிறார்கள்.
இதனைக் கருத்தில் கொண்டு தமிழகத்தை போதை பழக்க வழக்கத்தில் இருந்து காத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: தொடரும் ஆன்லைன் ரம்மி தற்கொலை; எப்போது விழிக்கும் தமிழ்நாடு அரசு – கேள்வி எழுப்பும் அன்புமணி!

போதை புழக்கத்தைச் சுட்டிக்காட்டியதோடு மட்டுமின்றி, மனுவுடன் கஞ்சா பொட்டலம் ஒன்றையும் இணைத்து இருந்திருக்கிறார்.
இதனையடுத்து சங்கர பாண்டியனை சுற்றி விளைத்த போலீசார் அவரை கைது செய்து தங்கள் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்
அப்போது தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டவே கஞ்சாவுடன் மனு கொடுக்க முயற்சித்ததாக பா.ஜ. நிர்வாகி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழக உள் மாவட்டங்களில் மே 3 வரை … -வானிலை முன்னெச்சரிக்கை!


Spread the love
Exit mobile version