திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற தனது மகளின் கருத்துக்கு தானும் ஆதரவு தெரிவிப்பதாக நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
திமுக நிர்வாகியும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், சமீபத்தில் ஒரு யூடியூப் பேட்டியில் பேசும்போது, திருமணம் செய்த பிறகே குழந்தை பெற வேண்டும் என்ற கருத்தைத் தாம் ஏற்கவில்லை .
திருமணம் இல்லாமலும் குழந்தை பெறுவது சாத்தியமானது என்றும் கூறியிருந்தார். அவரது இந்த கருத்து சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தனது மகளின் கருத்தை ஆதரிப்பதாக நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: திருமணம், சாதி, மதம், சடங்கு போன்ற விஷயங்களில் தானும் தனிப்பட்ட நம்பிக்கைகள் இல்லாதவர்.
இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட தேர்வு என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இன்றைய மருத்துவ முன்னேற்றத்தால் திருமணம் இல்லாமலும் குழந்தை பெற முடியும் என்பதால், அது ஒரு தனிநபர் முடிவு எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த கருத்துக்கு பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வரும் நிலையில், திவ்யா சத்யராஜ் தனது தந்தையின் ஆதரவு தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், தனக்கு வெளிப்புற அங்கீகாரம் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
