Cinema

கேபிள் டிவியில் வெளியான ஜனநாயகன் படம் – விஜய்க்கு விழுந்த பெரிய அடி!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள ஒரு உள்ளூர் கேபிள் சேனலில், இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நடிகர் விஜய் நடித்த “ஜனநாயகன்” திரைப்படம் ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்சார் அனுமதிக்காக காத்திருந்த இந்த படம், சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் சட்டவிரோதமாக கசிந்தது.

படத்தை பதிவிறக்கம் செய்வதும், பகிர்வதும் சட்டவிரோதம் என தயாரிப்பு நிறுவனம் எச்சரித்திருந்த நிலையிலும், சூலூர்–கருமத்தம்பட்டி பகுதிகளில் இயங்கும் “ராசி” கேபிள் சேனல் அந்த படத்தை முழுமையாக ஒளிபரப்பியது.

இந்த தகவல் வெளியாகியதும், தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்து, கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கேபிள் சேனல் உரிமையாளர் பழனிசாமி கைது செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *