Site icon ITamilTv

Admk Flag-”எனக்கு மட்டும் தான் தடை.. தொண்டர்களுக்கு இல்ல..” -ஓபிஎஸ் அதிரடி!

ADMK flag

ADMK flag

Spread the love

Admk Flag-அதிமுக கொடியை பயன்படுத்த எனக்கு மட்டும் தான் தடை விதிக்கப்பட்டுள்ளது ஆனால் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு தடை ஏதுமில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுக தொண்டர்கள் உரிமைமீட்புக் குழு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், எம்எல்ஏக்கள்மனோஜ்பாண்டின்,

அய்யப்பன், கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி, தேர்தல் பிரிவுச் செயலாளர் சுப்புரத்தினம் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் INDIA கூட்டணி `ஆண்டி மடம்’ என்பதுஉறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :Lok Sabha Election-வேகமெடுக்கும் தேர்தல் பணி ..3-வது நாளாக திமுக ஆலோசனை!

கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,இந்தியாவை வலிமை மிக்கதாக உருவாக்க பிரதமர் மோடி பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற கருத்து நாடு முழுவதும் வலுப்பெற்று இருக்கிறது.

எனவே, பாஜக தலைமையிலான கூட்டணிதான் வெற்றி பெறும். எங்கள் கூட்டணியின் தலைமை பாஜக தான் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதையும் படிங்க :https://x.com/ITamilTVNews/status/1751835246235206036?s=20

அதிமுக கொடி தொடர்பான செய்தியாளர் கேள்விக்கு,”அதிமுக கொடியை பயன்படுத்த ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எனக்கு மட்டும் தான் தடை விதிக்கப்பட்டுள்ளது ஆனால் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு தடை இல்லை.

மேலும் தமிழநாட்டில் ஒருபோதும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி அமையாது. மக்களவைத் தேர்தலில் ஓரிடத்தில்கூட பழனிசாமி அணி வெற்றி பெறாது என்று கூறினார்.

முன்னதாக திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் நடத்திய கூட்டத்தில் அதிமுக கொடி(Admk Flag) , சின்னத்தைப் பயன்படுத்தினர்.

இதையடுத்து, திண்டுக்கல் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் ராஜ்மோகன் மற்றும் அதிமுக நிர்வாகிகள், அதிமுக கொடி,

சின்னத்தைப் பயன்படுத்திய ஓபிஎஸ் அணியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.


Spread the love
Exit mobile version