ITamilTv

OPS health | ”OPS-க்கு திடீர் உடல் நலக்குறைவு..” மருத்துவர்கள் கொடுத்த Report!

OPS health sick

Spread the love

OPS health –கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

”தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு” என்ற பெயரில் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் மாவட்டம் வாரியாக தொண்டர்களை சந்தித்து கட்சி சார்பாக கூட்டங்களை நடத்தி வருகிறார்.

அந்த வகையில் திருநெல்வேலி ,தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் நிர்வாகிகளை சந்திப்பதற்காக மதுரையில் இருந்து கார் மூலமாக நெல்லை வந்தடைந்தார்.

இதையும் படிங்க: Isha Mahashivratri-”ஆதியோகி ரத யாத்திரை” வேலூரில் வரும் 8 -ம் தேதி.. ஈஷாவின் அசத்தல் அறிவிப்பு!

நேற்று முன்தினம் தென்காசி மாவட்டம் இலஞ்சியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று தொண்டர்களிடையே ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

அந்த கூட்டத்தில் ஓபிஸ் பேசியதாவது :கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் பாஜக அரசு சிறப்பாக ஆட்சி செய்து வருகிறது. அவர்கள் கூட்டணியை அமைத்து தனது பக்கத்தில் வலது புறத்தில் அமர செய்தார்கள்..

OPS health

ஆனால் ஒரே வாரத்தில் கூட்டணியில் இருந்து விலகி விட்டேன் என்று நீங்கள் சொல்கிறீர்கள்.. பாஜக உடன் கூட்டணியில் இருந்து எப்போது விலகினீர்களோ, அப்போது முதல் உங்களுக்கு சனி பிடித்து விட்டது.

அந்த சனி உங்களை சும்மா விடாது என்று ஆவேசமாக பேசினார்.

இந்த கூட்டத்திற்கு பிறகு நெல்லையில் உள்ள தனியார் ஓட்டலில் இரவு தங்கினார்.

இதனை தொடர்ந்து நெல்லை மாவட்டம் அம்பை தொகுதிக்கு உட்பட்ட சேரன்மகாதேவி யூனியன் கங்கணாங்குளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தொண்டர்களை சந்திக்க ஓ. பன்னீர்செல்வம் புறப்பட தயாராக இருந்துள்ளார்.

இதையும் படிங்க : Thirumavalavan Speech-”ஒரே மொழி ஒரே மதம்” என்ற கொள்கை.. நாட்டை பிளவு படுத்தும் பாஜக -திருமா காட்டம்!

அப்போது திடீரென்று தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உடனிருந்த நிர்வாகிகள் அருகில் உள்ள மருத்துவரை அளித்து வந்துள்ளனர்.

ஓ. பன்னீர்செல்வஇத்தை பரிசோதித்த மருத்துவர்கள் ஓய்வு எடுக்கும் படி அறிவுரை வழங்கினர்.

இதனால், கூட்டத்தில் பங்கேற்காமல் ஓ.பன்னீர்செல்வம் (OPS health) ஓட்டல் அறையிலேயே ஓய்வு எடுத்தார்.

இதையும் படிங்க: https://x.com/ITamilTVNews/status/1755886680077378036?s=20

இதனால் கங்கணாங்குளத்தில் ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த வைத்தியலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் தான் தொண்டர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

உடல்நல குறைவு காரணமாக ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களை சந்திக்காமல் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு சென்னை புறப்படுவதாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

PUBLISHED BY : S.vidhya


Spread the love
Exit mobile version