ITamilTv

கேப்டனின் உருவத்தை tattoo போட்ட பிரேமலதா

Spread the love

மறைத்த நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் உருவத்தை அவரது மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா கையில் tattoo குத்திக்கொண்ட வீடியோ தற்போது செம வைரல் ஆகி வருகிறது.

நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி காலை உயிரிழந்தார்.

சினிமா அரசியல் என இரண்டிலும் கொடிகட்டி பறந்த கேப்டன் விஜயகாந்தின் மரண செய்தி கேட்டு தமிழகமே சோக கடலில் மூழ்கியுள்ளது.

இதையடுத்து கேப்டனின் உடலுக்கு நடிகர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் நேரில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து டிசம்பர் 29 ஆம் தேதி கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்த்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கேப்டன் மறைவுக்கு பின் அவரது நினைவிடத்தில் ரசிகர்கள் தொண்டர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் திரை பிரபலங்கள் என பலரும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கேப்டன் விஜயகாந்தின் ஆசை படி தனது கட்சி அலுவலகத்திற்குள் வரும் அனைவர்க்கும் தினம் தினம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் கேப்டன் மறைவால் சற்று துவண்டு இருந்த அவரது கட்சியும் அதன் நிர்வாகிகளும் மீண்டும் பழையபடி களப்பணியாற்ற தயாராகி வருகின்றனர்.

கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் பிரேமலதா விஜயகாந்தின் அவர்களின் தலைமையில் கட்சி சார்ந்த அணைத்து முடிவுகளும் தற்போது முறை படி எடுக்கப்பட்டு வருகிறது.

இதுமட்டுமின்றி எதிர் வரும் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என்ற எதிர்பார்ப்பும் தமிழக அரசியல் களத்தில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சில காட்சிகள் தேமுதிக நிர்வாகிகளிடம் மறுமுகமாக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் சில செய்திகள் பரவி வருகிறது.

இப்படி இருக்கும் சூழலில் தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கப்போகிறது அல்லது கூட்டணி இன்றி தனியாக நிற்கப்போகிறதா என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Also Read : https://itamiltv.com/vijay-in-fans-crowd-viral-video/

இது ஒரு புறம் இறக்க தற்போது கேப்டனின் அழகிய உருவத்தை அவரது மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா கையில் பச்சை குத்திகொண்டுள்ளார் .

முகத்தில் புன்னகையுடன் கேப்டன் இருக்கும் அந்த tattoo வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது செம வைரல் ஆகி வருகிறது.


Spread the love
Exit mobile version