India

பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி முறிவு? தவெகவுக்கு சிக்னல் கொடுத்த ரங்கசாமி!

புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பாஜகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் முதல்வர் ரங்கசாமி புறக்கணித்துள்ளார். இதையடுத்து, இரண்டு மணி நேரம் காத்திருந்த பாஜக மத்திய அமைச்சர்கள் மற்றும் கட்சி தலைவர்கள் தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு கட்சி மேலிடத்தில் சந்திப்பு நடத்தினர்.

என.ஆர்.காங்கிரஸ் – பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் தேர்தலில் போட்டியிட உள்ளது. அதன்படி என்.ஆர்.காங்கிரஸுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 14 தொகுதிகள் பாஜக மற்றும் மற்ற கூட்டணி கட்சிகளால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

பாமகவுக்கு இடம் ஒதுக்கப்படாததால், அந்த கட்சி தனித்து 30 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவித்துள்ளது. ஆனால் ரங்கசாமி, லட்சிய ஜனநாயக கட்சியை கூட்டணியில் சேர்க்க வேண்டாம் என்றும் வலியுறுத்தி வருகிறார்.

இதற்கிடையில், பாஜகவினரின் தொகுதி விருப்ப பட்டியல் மேலிடத்திற்கு அனுப்பப்பட்டு, தற்போதைய என்.ஆர்.காங்கிரஸ் நிலைப்பாடு தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி முறிவு ஏற்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும், கூட்டணியில் இருந்து என்.ஆர்.காங்கிரஸ் விலகும் பட்சத்தில் தவெகவுடன் கூட்டணி அமைக்க மறைமுக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *