தமிழ்நாட்டில் பரப்புரை ஓய்ந்தபின் தேர்தல் ஆணையம் சில கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது.
- பரப்புரை ஓய்ந்தபின், தேர்தல் ஆணையம் சில கட்டுபாடு விதிப்பு
- இந்த நிலையில் பரப்புரை ஓய்ந்தபின், தேர்தல் ஆணையம் சில கட்டுபாடுகளை விதித்துள்ளது. அது பின்வருமாறு:
- இன்று மாலை 6 முதல் ஏப்.23இல் வாக்குப்பதிவு முடியும் வரை கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும்
- இன்று மாலை முதல் தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலத்தை நடத்த, பங்கேற்கக் கூடாது
- தேர்தல் விளம்பரத்தை திரைப்படம், டிவி, ரேடியோ, சமூக ஊடகங்கள் மூலம் மக்களின் பார்வைக்கு வைக்கத் தடை
- வேறு தொகுதியில் இருந்து அழைத்து வரப்பட்ட கட்சி நிர்வாகிகள் இன்று மாலைக்குள் வெளியேற வேண்டும்
- வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள் செயலற்றதாகிவிடும்
- வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வர வாகன ஏற்பாடு செய்ய வேட்பாளருக்கு அனுமதியில்லை
