2026 சட்டமன்றத் தேர்தல், வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது :
திமுகவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 20 ஆண்டுகாலம் உழைத்தார் என்பதை மறுக்க முடியாது. ஆனால் கட்சிக்காக எந்த உழைப்பும் இல்லாமல், உதயநிதி துணை முதலமைச்சர் ஆக்கப்பட்டுள்ளார். உதயநிதி ஸ்டாலின் என்ன சாதனை செய்தார்? அவருக்கு ஏன் துணை முதலமைச்சர் பதவி?
Also Read : நியூசிலாந்து அணியிடம் டெஸ்ட் தொடரை பறிகொடுத்தது இந்திய அணி..!!
2026 சட்டமன்றத் தேர்தல், வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும், மக்களுக்கு நலம் தந்த அதிமுக அரசின் திட்டங்களை போல் இல்லாமல் தற்போது கடன் வாங்கி மகளிர் உரிமைத்தொகை, பேருந்துகளில் இலவசப் பயணம் போன்ற அறிவிப்புகளை மட்டும் செய்துவருகிறார்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.