Tamilnadu

“கடல் கடந்து வாழும் தமிழர்களுக்கு துணை” – முள்ளிவாய்க்கால் குறித்து முதல்வர் விஜய்!

தமிழ்நாடு முதலமைச்சர் C. Joseph Vijay, “நம் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும் துணை நிற்போம்” என்று தெரிவித்துள்ளார். இலங்கையின் வடக்கு மாகாணத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டுப் போர் 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அந்த போரின் இறுதிக்கட்டத்தில், Mullivaikkal பகுதியில் பல தமிழர்கள் உயிரிழந்ததாகவும், பலர் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவங்களை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 18ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. அந்த நாளில் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள், போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று அனுசரிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் தனது கருத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தனது எக்ஸ் பதிவில், “முள்ளிவாய்க்கால் நினைவுகளை எப்போதும் நம் இதயத்தில் நிறுத்திக் கொள்ள வேண்டும். கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும் நாங்கள் துணை நிற்போம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *