Tamilnadu

“திருமாவளவனிடமும் தமிழக மக்களிடமும் மன்னிப்பு கேளுங்கள்” – ஆ. ராசாவுக்கு ஆதவ் அர்ஜுனா!

தமிழ்நாடு அமைச்சரவையில் விசிக மற்றும் ஐயூஎம்எல் இணைந்ததைத் தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெற்றதை எதிர்த்து திமுக தரப்பில் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அந்த வகையில், திமுக எம்.பி. ஆ. ராசா சமூக வலைதளத்தில் பெண்களை மையப்படுத்தி பதிவிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் அந்த பதிவை அவர் நீக்கினார்.

இதுகுறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தல் தோல்விக்கான காரணம் இன்னும் திமுகவுக்கு புரியவில்லை என விமர்சித்தார். மேலும், அரசியல் விமர்சனங்களை பெண்களின் உறவுகளை வைத்து பேசுவது பெரியாரும் அண்ணாவும் கற்றுக்கொடுத்த அரசியல் அல்ல என்றும் கூறினார். ஆ. ராசாவின் கருத்தை கண்டிப்பதாக தெரிவித்த அவர், தமிழக மக்களிடமும் விசிக தலைவர் திருமாவளவனிடமும் ஆ. ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். இதுகுறித்து கனிமொழியும் தனது கருத்தை தெரிவிக்க வேண்டும் என்றும் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *