Tamilnadu

லால்குடி தோல்விக்குப் பிறகு கு.ப. கிருஷ்ணனுக்கு வந்த பெரிய வாய்ப்பு!

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் கு.பா. கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக சார்பில் லால்குடி தொகுதியில் கு.பா. கிருஷ்ணன் போட்டியிட்டார். அதிமுக வேட்பாளர் லீமா ரோஸிடம் அவர் 2,739 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

இதற்கிடையில், தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். பின்னர் திருச்சி கிழக்கு தொகுதியில் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால், அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அந்தத் தேர்தலில் கு.பா. கிருஷ்ணன் மீண்டும் களமிறங்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில், அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவராக அரசு நியமனம் செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *