World

அமெரிக்காவில் அடுத்தடுத்து காணாமல் போன 10 விஞ்ஞானிகள் – என்ன தான் நடக்கிறது ? நடுங்கும் உலக நாடுகள்!

அமெரிக்காவில் கடந்த 2023 முதல் இதுவரை நாசா மற்றும் அணு ஆராய்ச்சி மையங்களில் பணியாற்றிய குறைந்தது 10 விஞ்ஞானிகள் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் தேசிய பாதுகாப்பு வட்டாரத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சிலர் உயிரிழந்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த சம்பவங்களுக்கு இடையே நேரடி தொடர்பு இருப்பதாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அமைப்பும் உறுதிப்படுத்தவில்லை.

விண்வெளி மற்றும் அணுசக்தி தொடர்பான மிக ரகசிய திட்டங்களில் பணியாற்றிய விஞ்ஞானிகள் காணாமல் போனது குறித்து பல்வேறு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

சிலர் வீட்டிலிருந்து வெளியே சென்ற பின்னர் மீண்டும் திரும்பவில்லை என்றும், அவர்களின் தனிப்பட்ட பொருட்கள் வீட்டிலேயே இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவங்கள் குறித்து வெள்ளை மாளிகை கவனம் செலுத்தி, முழுமையான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

அதேபோல் FBI உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து பல துறைகளுடன் ஒருங்கிணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. நாசாவும் இந்த விசாரணைக்கு ஒத்துழைப்பதாக தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இந்த சம்பவங்கள் வெளிநாட்டு தலையீடு இருக்கலாம் என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன.

சில அரசியல் தலைவர்கள் இது சாதாரண விபத்து அல்ல எனக் கூறி தேசிய பாதுகாப்பு பிரச்சனையாக பார்க்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

தற்போது அமெரிக்கா முழுவதும் இந்த மர்ம சம்பவங்கள் குறித்து தீவிர விவாதம் நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *