Cinema

விஜய் அரசியல் விமர்சனம்..?ஜேம்ஸ் வசந்தன் கார் மீது தாக்குதல்!

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது கார் கண்ணாடி சேதப்படுத்தப்பட்ட சம்பவம் குறித்து அளித்த பேட்டியில் தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

பொதுநலனுக்காக கருத்துகளை பகிரும்போது எதிர்ப்புகள் வருவது இயல்பானதே என அவர் கூறினார்.

இதுபோன்ற செயல்கள் மூலம் தன்னை அச்சுறுத்த முடியும் என்று யாரும் நினைக்க வேண்டாம்; தனது பணியை தொடர்ந்து செய்வேன் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அண்மையில் நடிகர் விஜயின் அரசியல் நுழைவை விமர்சித்து வந்த ஜேம்ஸ் வசந்தன், அதனால் சிலரின் எதிர்ப்பை சந்தித்து வருகிறார்.

இந்த நிலையில் அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து அவர் கூறுகையில், தன்னை பின்தொடர்ந்து இதை செய்திருக்கலாம் அல்லது கார் நிறுத்திய இடத்தில் கவனித்து தாக்கியிருக்கலாம் என்றார்.

யார் காரணம் என்பது காவல்துறை விசாரணையில் வெளிவரும் என தெரிவித்தார்.

மேலும், யூகிப்பதை தவிர்க்க விரும்புவதாகவும், எந்த அச்சுறுத்தலுக்கும் தளராது தனது கருத்துகளை தொடர்ந்து வெளிப்படுத்துவேன் என்றும் அவர் உறுதியாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *