India

அனுபவத்தை மதிக்க வேண்டும்..-விஜய்க்கு காந்தியின் பேரன் அட்வைஸ்!

தமிழக அரசியலில் புதிதாக களமிறங்கியுள்ள தவெக தலைவர் விஜய்க்கு, மேற்கு வங்க முன்னாள் ஆளுநரும் மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி ஒரு நீண்ட கடிதம் எழுதியுள்ளார்.

அதில், அவரது தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தாலும், இன்னும் சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்கப்படவில்லை என்பதையும் நினைவூட்டியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர், “வெற்றி கிடைத்திருப்பது முக்கியமானது. ஆனால் அதைவிட முக்கியமானது மக்களாட்சியின் மரபுகளையும் அரசியலமைப்பின் அடிப்படைகளையும் காப்பது” என்று குறிப்பிட்டுள்ளார்.

சட்டப்பேரவைக்குள் நுழையும் போது அனுபவத்தை மதிக்க வேண்டும் என்றும், அரசியல் எதிரிகளை தனிப்பட்டவர்களாக பார்க்காமல் ஜனநாயகப் போட்டியாளர்களாக அணுக வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும், அதிகாரிகளை நம்பி செயல்பட வேண்டும், அவர்களின் கருத்துகளை கேட்கும் மனப்பாங்கு வேண்டும் என்றும் கூறியுள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பும், நிலையான வளர்ச்சியும் ஆட்சியின் முக்கிய இலக்காக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இறுதியாக, வெறுப்பு அரசியலுக்கு இடமில்லாத, அமைதியான மற்றும் மதச்சார்பற்ற தமிழ்நாட்டை உருவாக்கும் பொறுப்பு புதிய தலைமையின் மீது இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கடிதம் தற்போது அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரவலாக பேசப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *