India

புதுச்சேரி: முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ரங்கசாமி!

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.

என்.ஆர்.காங்கிரஸ் 12 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும், அதிமுக மற்றும் லஜக தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்று மொத்தம் 18 தொகுதிகளை கைப்பற்றியுள்ளன.

புதுச்சேரியில் ஆட்சி அமைக்க 16 எம்எல்ஏக்கள் ஆதரவு போதுமான நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை அமைப்பது உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில், முதல்வர் ரங்கசாமி இன்று துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அமைச்சரவை அமைப்பு தொடர்பாக பாஜக தலைவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், ஆலோசனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், சேலத்தில் உள்ள தனது ஆன்மீக குருவின் கோவிலுக்கு சென்ற ரங்கசாமி, வெற்றி பெற்ற எம்எல்ஏக்களின் சான்றிதழ்களை வைத்து சிறப்பு பூஜை செய்தார்.

விரைவில் கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதங்களை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *