Tamilnadu

திமுக கூட்டணியிலிருந்து விலகும் எண்ணம் சிறிதும் இல்லை- IUML!

தவெக ஆட்சியமைக்க விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இடதுசாரி கட்சிகள் ஆதரவு வழங்கியுள்ளtது.

இந்த நிலையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் முக்கிய அங்கமாக இருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது.

தங்கள் ஆதரவு என்றும் திமுகவுக்கே தொடரும் என அக்கட்சி உறுதியாக அறிவித்துள்ளது. தவெக தரப்பில் இருந்து IUML-க்கு ஆதரவு கோரி அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் அந்த அழைப்பை அக்கட்சி நிராகரித்து, திமுகவுடன் உள்ள நீண்டகால உறவை தொடர்ந்து நிலைநிறுத்தும் என தெரிவித்துள்ளது.

மேலும், “நேற்றும் இருந்தோம், இன்றும் இருக்கிறோம், நாளையும் இருப்போம்” என கூறி திமுக கூட்டணியில் இருந்து விலகும் எண்ணமே இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

நடந்து முடிந்த தேர்தலில் IUML சார்பில் போட்டியிட்ட சையது ஃபாரூக் பாஷா (வாணியம்பாடி) மற்றும் ஏ.எம். ஷாஜஹான் (பாபநாசம்) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

தற்போது இரண்டு எம்எல்ஏக்களை கொண்டுள்ள இந்த கட்சி, பல ஆண்டுகளாக திமுகவின் முக்கிய கூட்டணி சக்தியாக செயல்பட்டு வருகிறது.

தவெக வருகையால் அரசியல் சமன்பாடுகள் மாறும் சூழலில், IUML எடுத்த இந்த முடிவு திமுக கூட்டணிக்கு மேலும் வலிமை அளித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *