Tamilnadu

தமிழ்நாட்டில் 5 தொகுதிகள் காலி.. அதிகாரப்பூர்வ அரசிதழ் வெளியீடு!

தமிழ்நாட்டில் திருச்சி கிழக்கு உள்ளிட்ட ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் அடுத்த ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியலில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது. தவெக கட்சி தனித்து அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி ஆதரவை நாடியது. திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியை அமைத்தது.

இதற்கிடையில் அதிமுகவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக சில எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். மதுராந்தகம் தொகுதியை சேர்ந்த மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதியை சேர்ந்த சத்யபாமா, பெருந்துறை தொகுதியை சேர்ந்த ஜெயக்குமார் ஆகியோரின் ராஜினாமாவால் அந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையாவும் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததால், தற்போது திருச்சி கிழக்கு உட்பட மொத்தம் ஐந்து தொகுதிகள் காலியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *