Site icon ITamilTv

பீதியில் ஓ.பி.எஸ் – பல்டி அடிக்கத் தயாராகும் முக்கியத் தலைகள்..!!

ops

ops

Spread the love

OPS : தமிழ்நாட்டின் இருபெரும் காட்சிகளில் ஒன்றான அதிமுகாவில் தற்போது ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே பிரச்சனை முற்றி போக கட்சி, கொடி, சின்னம் என ஒட்டுமொத்த அதிமுகவே இன்று எடப்பாடி பழனிசாமியின் கைகளுக்கு சென்றுவிட்டது .

இப்படி இருக்கும் நிலையில் இரட்டை இலையை மீட்போம் எனக்கூறி தன்ன்னுடன் இருக்கும் சிலருக்கு இன்று வரை நம்பிக்கை வார்த்து வருகிறார் ஓ.பி.எஸ். மறுபக்கம் பிரதமர் மோடியின் செல்வாக்கு தனக்கு இருப்பதாக பொதுவெளியில் காட்டிக் கொள்ளும் ஓ.பி.ஏஸ்.சுக்கு அவர் கூறுவது போல எந்த மவுசும் இல்லை என்பது கடந்த வாரம் பல்லடத்தில் கலந்து கொண்ட மோடியின் மேடையில் அவருக்கு இடம் அளிக்கப்படாததில் இருந்தே தெள்ளத்தெளிவாக தெரிந்துவிட்டது.

இந்நிலையில் தற்போது, பாராளுமன்ற அரசியல் களம் பயங்கரமாக சூடு பிடித்து வரும் நிலையில் திமுக, அதிமுக, பா.க.ஜ ஆகிய கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் மின்னல் வேகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தகமிழ்நாட்டின் முக்கியக் கட்சிகளாக கருதப்படும் பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக ஆகியவை அதிமுக மற்றும் பா.ஜ.க. ஆகிய 2 கட்சிகளோடும் மாறிமாறி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

தமிழக அரசியலில் இந்த இரு கட்சிகளுக்கும் அடுத்த நிலையில் உள்ளதாக கருதப்படும் நாம் தமிழர் கட்சி கூட, ‘தனித்து நின்று போட்டி’ எனக்கூறி ஒவ்வொரு கட்டமாக தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகிறது.

இப்படி இருக்கும் நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற தனிக்கட்சி வைத்திருக்கும் டிடிவி தினகரனையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு, ‘பாஜக கூட்டணியில் சேர்ந்து மோடியின் ஆசியோடு இரட்டை இலையை மீட்டு விடலாம்’ என கணக்குப் போட்ட ஓ.பி.எஸ்.சின் நிலையோ தற்போது மிகவும் பரிதாபமாக இருப்பதாக வருத்தத்துடன் புலம்புகிறார்கள் கூறுகிறார்கள் அவருக்கு நெருக்கமான சிலர்.

சிறிய கட்சிகளுடன் கூட கூட்டணிப் பேச்சு வார்த்தை நடத்தி வரும் பாஜக, ஓ.பி.எஸ்.சை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் இருப்பது அந்த அணிக்குள் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்களையே வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது .

‘நமது எம்.ஜி.ஆர்’, ‘நமது அம்மா’ என வாய் நிறைய பேசிய அவரின் தற்போதைய புலம்பல்கள் ஓ.பி.எஸ். அணியில் உள்ள முக்கிய தலைவர்களையும் சிந்திக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இது ஒரு புறம் இருக்க கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓ.பி.எஸ். வழக்கில் உச்சநீதி மன்றம் போட்ட உத்தரவும் அந்த அணியினரை திக்குமுக்காட வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 2001 முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சியின்போது வருவாய்த்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த ஓ.பி.எஸ். அப்போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.77 கோடி அளவிற்கு முறைகேடாக சொத்து சேர்த்ததாகவும், அவரின் சொத்து மதிப்பு 374 சதவீதம் உயர்ந்திருப்பதாகவும் ஓ.பி.எஸ்., அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத் மற்றும் குடும்பத்தினர் மீது வழக்கு ஒன்று பதிவானது. எனினும், கடந்த 2012 ஆம் ஆண்டு அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்யும் விதமாக சமீபத்தில் முன்னால் அமைச்சர்கள் பலரின் வழக்குகளையும் தாமாக முன்வந்து மறுவிசாரணைக்கு எடுத்து வரும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஓ.பி.எஸ். விடுதலை செய்யப்பட்ட அந்த சொத்துக் குவிப்பு வழக்கையும் மீண்டும் விசாரித்து வருகிறார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த மறுஆய்வு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகியது ஓ.பி.எஸ் தரப்பு. ஆனால், அதை விசாரித்த உச்ச நீதிமன்றமோ, ‘சென்னை உயர் நீதிமன்ற விசாரணையானது சட்டத்திற்கு உட்ப்பட்டே நடப்பதாகவும், அதில் தலையிட விருப்பம் இல்லை’ எனவும் கூறி கடந்த வாரம் தள்ளுபடி செய்தது.

சரி இதெல்லாம் ஒருபுறமிருக்க, தென் மாவட்டங்களில் ஓ.பி.எஸ்.சிற்கு பலம் இருக்கிறது என்ற மாயையை உடைத்துக் காட்டுவதற்காக அந்த அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக தூக்கி வரும் எடப்பாடி பழனிச்சாமி .

Also Read : https://itamiltv.com/pm-modi-coming-to-chennai-tomorrow-ops-ttv-in-tension/

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஓ.பி.எஸ். அணியின் முக்கியப் புள்ளிகள் சிலருக்கு தூண்டில் போட்டிருப்பதாகவும், எந்நேரமும் அவர்கள் அலேக்காக டைவ் அடிக்கலாம் எனவும் கிடைத்திருக்கும் தகவலால் ஓ.பி.எஸ் தற்போது பீதியில் உள்ளாராம் .

இதன் காரணமாகாவே ஓ.பி.எஸ் தினமும் தூங்கி எழுந்தவுடன் பல் விளக்குகிறாரோ இல்லையோ அதிகாலையிலேயே (OPS) ஒவ்வொருவராக போன் போட்டு நலம் விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.


Spread the love
Exit mobile version