ops and ttv : கடந்த வாரம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதராக தமிழக வந்த பிரதமர் நாளை சென்னை நந்தனத்தில் நடைபெற இருக்கும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மீண்டும் தமிழகம் வர உள்ளார் .
, மஹாராஷ்ட்ராவில் இருந்து தனி விமானம் மூலம் நாளை பிற்பகல் சென்னை வரும் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் செல்கிறார். பின்னர் மேம்படுத்தப்பட்ட அணு உலை இயக்கத் திட்டத்தை பார்வையிடும் மோடி அங்கு நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கிறார் ,
இதையடுத்து சென்னை நந்தனத்தில் உள்ள ஒ.எம்.சி.ஏ. கல்லூரி வளாகத்தில் நடைபெறும் பாஜக கூட்டத்தில் கலந்து கொள்கிறார் .
கடந்த வாரம் பல்லடம் அருகில் உள்ள மாதப்பூரில் பிரதமர் மோடி கலந்து கொண்ட ‘என் மண்; என் மக்கள்’ நடைபயண நிறைவு விழா நிகழ்ச்சியின் போது பா.ஜ.க. தலைவர்களோடு கூட்டணித் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இதில் ஆரம்பம் முதல் பா.ஜ.க. கூட்டணியில் இருப்பதாக கருதப்படும் ஓ.பி.எஸ்., டிடிவி தினகரன் ஆகியோரும் கலந்து கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு பெரிதும் நிலவியது.
கூட்டணி தொகுதிப்பங்கீடு எதுவும் முடியாத நிலையிலும் கூட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம், தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன்
இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவ், ஐ.ஜே.கே. தலைவர் பாரிவேந்தர், காமராஜர் மக்கள் கட்சி நிறுவனர் தமிழருவி மணியன் மற்றும் உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து ஆகியோர் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் ஓ.பி.எஸ்., டிடிவி தினகரன் ஆகியோர் அந்த விழாவில் பங்கேற்கவில்லை .
இதனால், ‘ஓ.பி.எஸ்., டிடிவி ஆகியோர் பா.ஜ.க. கூட்டணியில் உள்ளார்களா இல்லையா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரத்தில் அரண் போல் எழும்பி நின்றது .
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், “நாங்கள் ஒரே வீட்டில்தான் இருக்கிறோம்” என கூட்டணியில் இருப்பதை சூசகமாக தெரிவித்து அப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில் தற்போது, பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வரும் நிலையில் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவோடு கூட்டணி அமைத்துள்ள தலைவர்கள் அனைவரையுமே மோடியுடன் மேடையில் பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .
இந்த நிலையில், ஜி.கே.வாசன், ஜான் பாண்டியன் போன்ற கட்சித் தலைவர்களோடு பா.ஜ.க.வின் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு நேற்று தனது முதற்கட்ட கூட்டணி பேச்சு வார்த்தையை நடத்தி முடித்திருக்கிறது .
ஆனால் ஓ.பி.எஸ்., டிடிவி தினகரன் ஆகியோரோடு கூட்டணிப் பேச்சு வார்த்தைக்கான அறிகுறிகள் கூட தெரியாததால் அந்தக் கட்சிகளின் தொண்டர்கள் பெரும் அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் உள்ளனர்.
இப்படி இருக்கும் நிலையில் பிரதமர் மோடி நாளை பிற்பகல் சென்னை வரவிருக்கும் நிலையில், சென்னை டி. நகரில் உள்ள கமலாலயத்தில் பா.ஜ.கவின் மையக்குழு கூட்டம் நடைபெற இருப்பதால், இன்றோ அல்லது நாளை காலையிலோ கூட்டணி பேச்சு வார்த்தைகள் ஓரளவு நிறைவடையலாம் எனவும்
ஓ.பி.எஸ்., டிடிவி தினகரன் ஆகியோர் மோடியுடன் விழா மேடையில் பங்கேற்பது குறித்து இனிமேல்தான் தெரியவரும் எனக் கூறப்படுவதாலும் ஓ.பி.எஸ்., டிடிவி தரப்பினர் உச்சகட்ட பதற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஓ.பி.எஸ்., டிடிவி ஆகியோர் பாஜகவின் (ops and ttv) கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைவார்களா இல்லையா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.