Tamilnadu

எடப்பாடி பழனிசாமி ஆட்சியமைக்க வேண்டும்.. ஆளுநருக்கு டிடிவி தினகரன் கடிதம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய அரசு அமைக்க அழைப்பு விடுக்குமாறு தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகருக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைக்கும் உரிமையை எடப்பாடி பழனிசாமிக்கு வழங்க வேண்டும் என தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதே கடிதத்தில், அமமுக சார்பில் மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ். காமராஜ், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் கையெழுத்திட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் அவரும் புதிய அரசை அமைக்கும் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டின் முதல்வராக எடப்பாடி பழனிசாமியை அழைத்து பதவியேற்கச் செய்ய வேண்டும் என ஆளுநரிடம் பணிவுடன் கேட்டுக்கொண்டுள்ளதாக டிடிவி தினகரன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை தற்போது தமிழக அரசியல் சூழலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சி அமைக்கும் சூழ்நிலையில் கூட்டணி மற்றும் ஆதரவு கணக்குகள் முக்கியமாக பேசப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *