ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை ஆதரவை உறுதி செய்த பிறகு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று மாலை ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை நேரில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதங்களை ஆளுநரிடம் வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
பெரும்பான்மை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, விஜயை ஆட்சி அமைக்க ஆளுநர் அதிகாரப்பூர்வமாக அழைத்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
ஆனால் ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்டதால், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் ஐயுஎம்எல் கட்சிகளின் ஆதரவை விஜய் பெற்றார். இதன் மூலம் கூட்டணியின் பலம் 120 ஆக உயர்ந்தது.
இதையடுத்து, நாளை காலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
