Tamilnadu

தவெக தலைவர் விஜய் புதிய ஸ்டைல்.. கோலம் போட்டு வாக்கு சேகரிப்பு – வைரல் வீடியோ!

தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

இதற்காக அவர் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி பிரச்சாரம் செய்திருந்தார்.

இந்த நிலையில், பெரம்பூரில் உள்ள கட்சி தேர்தல் அலுவலகத்துக்கு வந்த விஜய், அங்கிருந்து நேரடியாக வீடு வீடாக சென்று மக்களிடம் வாக்கு கோரினார்.

ஒரு வீட்டின் முன்பு அவர் கோலம் வரைந்து வாக்கு கேட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்த விஜயம் குறித்து முன்கூட்டியே எந்த தகவலும் வெளியிடப்படாததால், பெரிய அளவில் மக்கள் கூட்டம் திரளவில்லை.

கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில், கோலம் போட்டதும் விஜய் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *