அதிகமான கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்திலேயே மாற்றுத்திறனாளிகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் அதிக அளவிலான தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டமாக புதுக்கோட்டை திகழ்கிறது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று பேட்டியளித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அரசு மருத்துவமனையில் இன்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் அங்கு அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதிகள் மற்றும் பொது மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேரிடர் காலங்களில் சுகாதாரத் துறையில் தமிழகம் இந்தியாவிற்கே முன்மாதிரியாக திகழ்கிறது என்று தெரிவித்த அவர், தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் வசதிகள் குறித்து மருத்துவத் துறை அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்ததாகவும் தெரிவித்தார்.

தமிழகத்திலேயே மாற்றுத்திறனாளிகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் அதிக அளவிலான தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டமாக புதுக்கோட்டை திகழ்கிறது என்றும் 98 சதவீத மாற்றுத் திறனாளிகளுக்கும் 60 சதவீத கர்ப்பிணிகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Total
0
Shares
Related Posts