இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் ஆன்லைன் படிப்பை நிறைவு செய்து சான்றிதழ் பெற்ற காரைக்கால் மாணவர்க்கு அய்மான் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் ஆன்லைன் படிப்பை நிறைவு செய்த மாணவருக்கு அபுதாபி அய்மான் சங்கத்தின் தலைவர் ஹெச் எம் கீழக்கரை முஹம்மது ஜமாலுதீன் அறிவுறுத்லுக்கு அமைய நேற்று அய்மான் சங்கத்தின் நிர்வாக செயலாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர், மாணவரின் தந்தை அஜ்மல் ஹமீத்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் மாணவர் இம்ரான் சாதிக் அவர்கள் விண்வெளித்துறையில் எதிர்காலத்தில் சாதனை படைக்க அய்மான் சங்கத்தின் அனைத்து நிர்வாகியின் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்
துபாயில் பிறந்த இந்த மாணவர் தற்போது காரைக்கால் குட் செபர்டு ஆங்கில பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது