ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்காக கடலுக்கு அடியில் வாழ்த்திய நீச்சல் வீரர்கள்

2020-ற்கான ஒலிபிக் போட்டிகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடைப்பட்டு 2021-இல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது. இதில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் வீரர் வீராங்கனைகள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் இந்திய வீரர் வீராங்கனைகள் ஈட்டி எறிதலில் தங்க பதக்கமும், குத்துச்சண்டை, பளு தூக்குதல், இறகுப்பந்து, ஹாக்கி இறகுப்பந்து, உட்பட மொத்தமாக 7 பதக்கங்களை வென்று நாடு திரும்பினர். இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

Olympic

இந்நிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரர் அரவிந்த் என்பவர் தனது குழுக்களுடன் சேர்ந்து கடலுக்கு அடியில் 12 மீட்டர் ஆழத்தில் சென்று ஹாக்கி மட்டை, குத்துச்சண்டை, ஈட்டி எறிதல், இறகுப்பந்து பேட்டுடன், பளு தூக்குவதுபோல் கடலுக்கடியில் இந்திய தேசியக் கொடியோடு பதக்கம் வென்ற வீரர்களுக்கு வித்தியாசமான முறையில் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Total
0
Shares
Related Posts