வீரர்களுடன் தொலைபேசியில் பேசுவது மட்டும் போதாது- ராகுல் காந்தி

2020-ற்கான ஒலிபிக் போட்டிகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடைப்பட்டு 2021-இல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது. 16 நாட்கள் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் வீரர் வீராங்கனைகள் பலர் கலந்து கொண்டனர். இதில் இந்திய வீரர் வீராங்கனைகள் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை பெற்று சாதனை படைத்தனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடி, டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுடன் காணொளி காட்சி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்து கலந்துரையாடினார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி இன்ஸ்டாகிராமில் கருத்து தெரிவித்துள்ளார்.

Rahul

அதில் கடந்த காலங்களில் ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு அறிவித்தபடி இன்றும் பரிசுகள் சென்று சேரவில்லை என வெளியான பத்திரிகை செய்திகளை சுட்டிக்காட்டி, ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற வீரர்களுடன் தொலைபேசியில் பேசுவது மட்டும் போதாது என்றும் அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட விருதுகள் சென்று சேர்வது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் பதிவிட்டப்பட்டுள்ளது
விளையாட்டு வீரர்களுக்கு பதக்கம் மட்டும் போதாது என்றும் பாராட்டுகளும் பரிசுகளும் அவசியம் என்றும் ராகுல் காந்தி மேலும் கூறியுள்ளார்

Total
0
Shares
Related Posts