என்னை தாராளமாக கைது செய்யுங்கள்! – நடிகை மீரா மிதுன் காட்டம்

காந்தி, நேரு எல்லாம் சிறைக்கு போகவில்லையா? என்னை கைது செய்வது என்றால் தாராளமாக செய்யுங்கள் என நடிகை மீரா மிதுன் காட்டமாக வீடியோ ஒன்றை தெரிவித்துள்ளார்
2016 ஆம் ஆண்டு ‘மிஸ் சவுத் இந்தியா’ பட்டம் வென்றவர் தமிழ்செல்வி என்கின்ற மீராமிதுன். இவர் மோசடி செய்து ‘மிஸ் சவுத் இந்தியா’ பட்டதை வென்றதாக தேர்வு குழுவிற்கு தெரியவர அவருக்கு கொடுக்கப்பட்ட பட்டம் பறிக்கப்பட்டது.

பிக் பாஸ் மூலம் கிடைத்த ஊடக வெளிச்சம் மூலமாக தன்னைத்தானே சூப்பர் மாடல் என கூறி பலரையும் கீழ்த்தரமாக விமர்சிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளவர் மீரா மிதுன்.
படவாய்புகள் ஏதும் இல்லாத மீரா மீதுன் தனக்கு ஒரு ரசிகர் கூட்டமே இருப்பது போல காட்டிக்கொள்ள பணம் கொடுத்து செய்த சில விபரீத முயற்சிகள் தொடர்பான ஆடியோகள் கூட இணையத்தில் வெளியாகி அவரின் சுய ரூபத்தை தோலுரித்து காட்டியது
இந்நிலையில் சமீப காலமாக நயன்தாரா, பிரியா ஆனந்த் மற்றும் என்ஜாயி எஞ்சாமி புகழ் பாடகி ‘தீ’ உள்ளிட்டோர் தன்னுடைய முகத்தை பயன்படுத்துவதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட மீரா மிதுன், ‘நாராயணன் உங்க பொண்ணு ஏன் என் மூஞ்ச யூஸ் பண்றாங்க, அவரோட ஒரிஜினல் மூஞ்சி எல்லாருக்கும் தெரியும். உங்க ஒரிஜினல் மூஞ்ச காட்ட அவ்ளோ அசிங்கமா இருக்கா என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவரது மகள் தீ ஆகியோரை மிக இழிவாக பேசி இருந்தார்.

Newspaper WordPress Theme

இந்நிலையில் மீண்டும் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு தலித் சமூகத்தினர் குறித்து மிக இழிவாக அந்த வீடியோவில் பேசியுள்ளார் மீரா மிதுன். குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த இயக்குனர்கள், திரை பிரபலங்கள் தான் தன்னுடைய முகத்தை பயன்படுத்துவதாகவும், இவர்களை எல்லாம் சினிமாவை விட்டு துரத்த வேண்டும் என்றும் மிகவும் இழிவாக பேசியுள்ளார் மீரா. அவரின் இந்த பேச்சுக்கு சமூக வலைத்தளத்தில் கடும் கண்டனங்கள் எழுந்தது
தனது ஆண் நம்பருடன் மீரா தோன்றும் அந்த வீடியோவில் குறுப்பிட்ட சமூத்தை பற்றி அவமதிக்கும் வகையில் பேசுவதுடன் அந்த சமூகத்தை சார்ந்த இயக்குநர்களை திரை துறையை விட்டு நீக்கவேண்டும் என்று அறுவருக்கத்தக்க வகையில் பேசி இருந்தார்
மீராமிதுனின் இந்த அடாவடி திமிர் பேச்சு பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி வன்னியரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்திருந்தார். அப்புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு – சைபர் கிரைம் போலீசார் நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கலகம் செய்ய தூண்டிவிடுதல், சாதி மதம் குறித்துப் பேசி கலகம் செய்ய முயற்சித்தல் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Newspaper WordPress Theme

இந்த விவகாரம் தொடர்பாக நடிகை மீரா மிதுன் இன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் மீரா மிதுன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் என்னை தாராளமாக என்னை கைது செய்யுங்கள்… ஏன் காந்தி , நேரு எல்லாம் சிறைக்கு போகவில்லையா? என்று மீரா மிதுன் தெரிவித்துள்ளார். மேலும் ஆனால் , என்னை கைது செய்வது என்பது நடக்காது ; அப்படி நடந்தால் அது உங்கள் கனவில் தான் நடக்கும் என மிரட்டல் தொனியில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நடிகர்களை பற்றி அவதூராக பேசியது , கொலை மிரட்டல் விட்டது, பண மோசடியில் ஈடுப்பட்டது, கேரள மக்களை அவதூறாக பேசிய உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் மீரா மிதுன் தொடர்ந்து இப்படி சர்ச்சைக்குரிய வகையில் பேசிவரும் பேச்சுகளால் விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Total
0
Shares
Related Posts