சிம்புகாக 21 வயது இளம் நடிகையை பிடித்த கௌதம் மேனன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் சமீபகாலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து பல இயக்குனர்களும் சிம்புவை வைத்து படங்களை இயக்கி வருகின்றன.

தற்போது சிம்பு நடிப்பில் மாநாடு படம் விரைவில் வெளிவர உள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு எனும் படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் சிம்புவுக்கு அம்மாவா ராதிகா நடித்து வருகிறார்.

சமீபத்தில் சிம்பு கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் ராதிகா புகைப்படம் கூட வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. மேலும் இப்படத்தில் சிம்பு இளமையான தோற்றத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக முழுவதுமாக உடல்நிலை குறித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

மேலும் இப்படத்தில் முக்கியமான காட்சிகளை படப்பிடிப்பு நடத்தி வருவதாகவும். மேலும் இப்படத்தில் ஒரு சில காட்சிகள் சிம்பு சிறப்பாக நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் சிம்புவின் காட்சிகள் மட்டுமே தற்போது படப்பிடிப்பு நடத்துவதாகவும் விரைவில் மற்ற நடிகர்களின் காட்சிகள் படப்பிடிப்பு நடத்தப்படும் எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது சிம்புக்கு ஜோடியாக நடிப்பதற்கு கையடு லோஸர் என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் ஒரு சில நடிகர்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் விரைவில் சிம்பு இப்படத்தினை பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Total
0
Shares
Related Posts