சீன தடுப்பூசி செலுத்திக்கொண்ட இலங்கையர்கள் பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல தடை

சீனாவின் தயாரிப்பான சினோஃபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட இலங்கை மக்கள் பிரான்ஸ் நாட்டிற்கு செயல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2021 ஜூலை 31 முதல் அமல்படுத்தப்பட்டுள்ள நடைமுறையின்படி சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோஃபார்ம் தடுப்பூசியை பெற்றுக் கொண்ட இலங்கை மக்கள் அந்நாட்டினுள் நுழைய அனுமதி தடை விதிக்கபடுவதாகவும்,
ஃபைசர், கோவிஷீல்ட், மாடர்னா, அஸ்ட்ராஜெனேகா, மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்கள் பிரான்ஸ் நாட்டினுள் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கொழும்பிலுள்ள பிரெஞ்சு தூதரகம் அறிவித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Total
0
Shares
Related Posts