தலைவர் 171 ஷூட்டிங் விரையில் தொடங்கும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினி ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து தற்போது வேட்டையன் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார்.
‘ஜெய்பீம்’ பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் ரஜினியின் 170-வது படமான இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் வேட்டையன் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றிருந்த ரஜினி இன்று சென்னை திரும்பினார்.
அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, தலைவர் 171 படம் குறித்து கூறி உள்ளார்.
லால் சலாம் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறிய அவர், லால் சலாம் படத்தை இயக்கிய தனது மகள் ஐஸ்வர்யா, தயாரித்த லைகா நிறுவனம் உள்ளிட்ட படக்குழுவினருக்கும் பாராட்டுகளை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ரஜினியிடம் வேட்டையன் படம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஜினி, வேட்டையன் 80% முடிந்துவிட்டதாகக் கூறினார்.
மேலும், வேட்டையன் ரிலீஸ் தேதி பற்றிய கேள்விக்கு, அது இன்னும் முடிவாகவில்லை என்றார். அதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட பிளான் குறித்தும் ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதையும் படிங்க : வெற்றி துரைசாமி விபத்து ! DNA முடிவுகள் நாளை வெளியாக வாய்ப்பு- Kinnaur District Collector
அதற்கு “அடுத்து நம்ம லோகேஷ் கனகராஜ் படம் தான்… சீக்கிரமே தலைவர் 171 ஷூட்டிங் தொடங்கும்” எனக் கூறினார். மேலும் இது ஏப்ரல் அல்லது மே மாதம் தொடங்கும் எனவும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்த லால் சலாம் திரைப்படம் நேற்று திரை அரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், தலைவர் 171 படம் குறித்து ஸ்டார் ரஜினியே அப்டேட் கொடுத்துள்ளார். இதனால் சீக்கிரமே இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே வேட்டையன் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.