கோரானா பரவலைத் தடுக்கக் கடைப்பிடிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் முழு வேகம் பெற்றுள்ளன. இதனால் உற்பத்திப் பொருட்களின் விற்பனை முந்தைய ஆண்டுகளைவிட உயர்ந்து பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது.
இந்நிலையில் மும்பை பங்குச்சந்தை வரலாற்றில் முதன்முறையாக சென்செக்ஸ் 55 ஆயிரம் என்னும் வரம்பைத் தாண்டியுள்ளது.
மும்பை பங்குச்சந்தையில் இன்று தொடக்கத்தில் இருந்தே வணிகம் ஏற்றம் கண்டது. பகல் 11 மணியளவில் சென்செக்ஸ் 325 புள்ளிகள் உயர்ந்து 55 ஆயிரத்து 169 ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு நிப்டி 95 புள்ளிகள் உயர்ந்து 16 ஆயிரத்து 459 ஆக உள்ளது.